Wednesday, September 26, 2007

மூன்றாவது மனிதனின் கவிதை.

மூன்றாவது மனிதனின் கவிதை.
- வ.ஐ.ச.ஜெயபாலன்.

என்றோ ஆழ்மனதுள் தைத்து
இன்ன்னும் சிப்பிச் சிறு மணலாய் நெருடும்
காலமுகமான
ஒரு கவிதையடி நீ.
தொடுவான் எரிய
மணல் ஊருகி அலை புரளும் பாலையிலே
ஈடன் பூந்தோட்டத்து வழி தவற
ஓயாமல் சபிக்குமொரு
ஒட்டகத்தைப் புணர்ந்தவன் நான்.

ஏவாள் நீ இன்றெங்கே.
உந்தன் உடற் தணலின் முலைச் சுவாலை
இதழ் பொசுங்கத் தின்று உயிர் எரிந்த காலத்தே
நீ இச்சித்தும் நான் தவிர்த்த
அந்த விலக்கப் பட்டகனி இன்னும் இருக்கிறதா.
உன்னிடத்தே வளைய வளைய வந்து
எனைக் கண்டால் நச்சுப் பொறாமை வழியச் சிரித்திடுமே
அந்த அருவருத்த பாம்பு
அது எங்கே.
உன் பிள்ளை ஒன்றுக்குப் பாம்புக் கழுத்து
மற்றதற்ககுப் பாம்புக் கண் என்ற
ஊர்வாய் மொழியைஒப்பவில்ல்லை என் மனசு.

இருள் கலைய முன்னெழுந்து காடு செலல்
நள்ளிரவிற் சுமையோடு வீடடைதல்
இரவெல்லாம் பதனிடுதல் என்றிருக்கும்
ஆதாம் சுகமா.
காட்டான்தான்
என்றாலும் எம்முன்னே
நட்போடு அவனுதிர்த்த பூமுறுவல்கள்
இன்றும் கமழும்.
ஜனநாயகமே கற்பென்றிருந்த அவன் காட்தலின்ன முன்
இந்த ஞாலம் கடுகு.

இது யாருடைய வாழ்வு.
யார் பட்டி மந்தைகள் நாம்.
கூடல் கழிதல் பெருகல் பிரிதலென்று
நம் இருப்பு யாருடைய கணித விழையாட்டு.
எது பகடை எவர் காய்கள்
இது எவருடைய சதுரங்கம்.

No comments: